மழை நின்ற பின்பும் ---> படம்: ராமன் தேடிய சீதை
மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல்
எனக்கும் காதல் பிறந்திருக்கே அதற்குன் பெயர் வைக்கட்டுமா
எனக்குள் இதயம் தனித்திருக்கே அதை உன்னுடன் சேர்க்கட்டுமா
நீர் துளிகள் நிலம் விழுந்தால் பூக்கள் மெல்ல தலையசைக்கும்
என் மனதில் நீ நுழைந்தால் மௌனம் கூட இசை அமைக்கும்
பூங்குயில்கள் மறைந்திருந்தால் கூவும் ஓசை மறைவதில்லை
தாமரையாய் நானிருந்தும் தாகம் இன்னும் அடங்கவில்லை
பாதம் விரைந்து நடக்கும், இந்த பயணத்தில் ஏன் இந்த நடுக்கம்
வானம் இருக்கும் வரைக்கும் இந்த வானவில் உன்னுடன் இருக்கும்
மழைத்துளி பனித்துளி கலந்த பின்னே அது மறுபடி இரண்டென பிரிந்திடுமா?
கண் இமைகள் கைத்தட்டியே உன்னை மெல்ல அழைக்கிறதே
உன் செவியில் விழவில்லையே உள்ளம் கொஞம் வலிக்கிறதே
உன் அருகே நான் இருந்தும் உண்மை சொல்ல துணிவு இல்லை
கைகளிலே விரல் இருந்தும் கைகள் கோர்க்க முடியவில்லை
உன்னை எனக்குப் பிடிக்கும், அதை சொல்வதில்தானே தயக்கம்
நீயே சொல்லும் வரைக்கும் என் காதலும் காத்துக் கிடக்கும்
தினம் தினம் கனவினில் வந்துவிடு
நம் திருமண அழைப்பிதழ் தந்து விடு
அழகான பாடல், அருமையான வரிகள், மென்மையான இசை.....
பாடலை upload செய்ய தான் முடியவில்லை!
Monday, March 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment