Sunday, February 8, 2009

சிங்கப்பூரில் தைப்பூசம்



தைப்பூசத் திருவிழா இன்று சிறப்பாக நடந்தேறியது.







ஞாயிற்று கிழமையானதால் கூட்டம் பயங்கரமாக இருக்கும் என நினைத்து கோயிலுக்கு போக சற்று தயங்கிய எனக்கு (எனக்கு தான் கூட்டம் என்றாலே allergy ஆச்சே) சற்று வியப்பாக தான் இருந்தது. கூட்டம் இருக்க தான் செய்தது - ஆனால் அதே நேரத்தில் ஏற்பாடுகளும் சிறப்பாக இருந்தன. Crowd control சிறப்பான முறையில் நடந்தேறியது. இந்த முறை பெருமாள் கோயிலிலிருந்து நான் நடந்து வராவிட்டாலும், நடந்து வந்தவர்கள் ஆலயத்திற்கு வெளியில் அதிக நேரம் காத்திருக்கவில்லை. அதற்காக கடவுள் சன்னிதானத்திற்கு முன்பும் அவ்வளவாக மக்களை அவசரப் படுத்தவில்லை.





இந்த வருட தைப்பூச கொண்டாடத்தில் என்னைக் கவர்ந்த ஒரு அம்சம்: சுற்றுபுறத் தூய்மை. இதற்கு இந்த வருடம் அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருந்தது. முக்கியமாக ஆலய வளாகம் தண்ணீர், பால் எல்லாம் சிந்தி தொரு தொரு வென இருக்காமல் சுத்தமாக, dryஆக இருந்தது. தண்ணீர் பந்தல் போடப்பட்டிருந்த இடங்களும் ஈரமாக இல்லாமல் அடிக்கடி சுத்தம் செய்யப்பட்டுக்கொண்டிருந்தன. இதற்கு ஆலய ஏற்பாட்டுக் குழு மட்டும்மல்ல, விழாவிற்கு வந்திருந்த மக்களும் முக்கிய காரணம்.














இது போன்ற விழாக்களில் உறவினர்கள், நண்பர்கள் போன்றவர்களையும் சந்திக்க முடிகிறது. அதுவும், சிங்கையில் தைப்பூசம் என்பது ஒரு கோயிலில் காணிக்கை செலுத்தும் விழாவாக இருப்பதால், அனைவரையும் ஒரு கூரையின் கீழ் சந்திக்க நேருகிறது. பல நாட்கள் தொடர்பு விட்டு போனவர்களை கூட இது போன்ற விசேஷங்களில் பார்க்க முடிகிறது.

தைப்பூச திருவிழா இந்தியர்களுக்கு மட்டும் அல்லாது நம் நாட்டில் வசிக்கும் பல இனத்தவரும் கலந்து கொள்ளும் கொண்டாட்டமாக அமைகிறது. இந்த ஆண்டு சற்று அதிகமான சீனர்கள் காவடி எடுப்பதை பார்க்க முடிந்தது.







ஆக மொத்ததில், மற்ற வருடங்களைப் போல், எப்போது வீட்டுக்கு போவோம் என்றில்லாமல், இன்னும் சிறிது நேரம் இருந்து பார்த்துவிட்டு போகலாமே என்ற உணர்வு ஏற்பட்டது.









No comments: